E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

மனித உறவுகளுக்குள்ளே வேற்றுமைகள் வளர்ந்து பகைமை பாராட்டுவது என்றும் இல்லாத அனவிற்கு மேலோங்கி நிற்கிறது. தனக்குப் போட்டி இன்னொரு மனிதன் தான் என்று மக்கள் நினைப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நாட்டுக்காரன் இன்னொரு நாட்டுக்காரனை எதிரியாக நினைப்பதும், ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை ‌எதிரியாக நினைப்பதும், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை பகையாக நினைப்பதும் இன்று சகஐம். உலகமக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் தான் என்று பாட்டுப் பாடுவதற்கு ‌வேண்டுமென்றால் வார்த்தை ஐாலங்ளோடு பொருத்தமாக இருக்கும்.

எல்லோரும் சமமென்று அனைவரும் நினைக்க வேண்டும். நாம் மட்டும் அதைப் பேசி கொண்டிருக்க, மற்றவர்கள் தங்கள் பாதுகாப்பும், வளர்ச்சியும் முக்கிய‌மென்று சுயநலத்தோடு செயல்பட்டால் ஏமாறப் போவது நாம் தான். கல்வி, தொழில், விவசாயம் ‌போன்ற துறைகளின் வளர்ச்சி தான் நம்மை முன்னேற்றுமென்று என்று கவனத்தைச் செலுத்தி, நம் ஒற்றுமையைப்பற்றிக் கவலைப்படவிட்டால் நம் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். பாதுகாப்பை பலப்படுத்தாமல் முன்னேறிப் பலன் இல்லை. என்ன தொழிலை, வியாபாரத்தைச் செய்தாலும் நம் பாதுகாப்புக்கென்று கொஞ்சமாவது கவனம் செலுத்த வேண்டும். இன்னும் இதை உணரவி்‌ல்லையன்றால் நாம் சம்பாதித்ததை அடுத்தவன் அடித்துப் பிடுங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. நம் குழந்தைகளுக்குச் சொத்து சேர்த்தால் மட்டும் போதாது இந்த கொங்கு மண்ணில் நாம் சம்பாதித்து வைத்ததை அனுபவிக்க அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அந்த பாதுகாப்பை உருவாக்குவதும் நமது கடமை தான்.

அரசியல் அங்கீகாரத்துக்காக நாம் களமிறங்கியிருப்பது, நம்முடைய பாதுகாப்புக்காகத்தான். நாம் சார்ந்திருக்கின்ற விவசாயம், நாம் நடத்துகின்ற தொழிற்கூடங்கள், நாம் நடத்துகின்ற அனைத்து தொழில்களும் பாதுகாக்கப்படவேண்டும். தனி ஒருவனோ, ஒரு அமைப்போ நம்மை மிரட்டக்கூடாது.

ஒரு கொங்கன் கூட பயந்தான் என்று கேள்விப்படக்கூடாது. கொங்கு நாட்டு அரசு அதிகாரிகள் வளர்ச்சி பணியாற்றும் போது தடைகள் ஏற்படுத்துபவர்கள் தகர்த்தெரியப்பட வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நம் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பாக நாம் இருக்க வேண்டும். மற்ற கட்சிகளிலிருக்கின்ற நம் அரசியல் தலைவர்கள் கூட அவரவர் கட்சிகளில் சுயமரியாதையோடு தைரியமாக இயங்க நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியத்தை உள்ளே மறைக்காமல் மானத்தோடு நம் மண்ணில் நாம் வாழ வேண்டும்.

இது தான் கொங்கு நாட்டு மக்களுக்கு நாம் கொடுக்க துடிக்கும் பாதுகாப்பு. இப்படிப்பட்ட பாதுகாப்பிற்காகத் தான் இந்த கடின உழைப்பு. நம் ஒற்றுமையும் எழுச்சியும் மட்டும் தான் இதை சாதிக்கக் கூடியது.