E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

கொங்கு நாடு ‌என்பது சேரநாடு, பாண்டியநாடு, ‌சோழழநாடு போல தொண்டைநாடும், கொங்கு நாடும் சேர்ந்தது தான் கொங்கு நாடு. கொங்கு நாட்டிற்குரிய மக்கள் கொங்கு வேளாளர்கள். கொங்கு வேளாளர்கள் குடும்ப பணிக்காகவும் ”பசுங்குடி” என்ற பெயருடைய 2 ஆயிரம் பேர் இருந்தனர். அவர்கள் 18 பிரிவினர்களாக வாழ்ந்ததாக நாட்டுப்பாடல்களும், இலக்கியங்களும் கூறுகின்றன. கொங்கு நாட்டை முதலில் 24 நாடுகளாக்கி பின்னர் தாராபுரம், சங்ககிரி, தணயாக்கன் கோட்டை ஆகிய 3 இடங்களை மையமாக வைத்து பிரிக்கப்பட்டன. இந்நாடுகளிலெல்லாம் நாட்டு சபைகள் அமைத்து பல சுயாட்சி கண்டவர்கள் நம் கொங்கு வேளாண் பெருமக்கள் காடு அழித்து, பட்டை பிரித்து நாடும் நகரமும் ஏற்படுத்தி கோட்டைகளும், பேட்டைகளும் அமைத்து குளம் தொட்டு அணைகளும் வாய்க்காலும் கண்டு, வளம் பெருக்கி உழைப்பால் உயர்ந்து இந்த கொங்கு நாட்டை பொன் விளையும் பூமியாக மாற்றியவர்கள், நம் கொங்கு வேளாளர்கள். நம் கொங்கு நாட்டில் தற்போது பல்வேறு சமூகத்தினரும் வாழ்கின்றனர். கொங்கு நாட்டை பொறுத்தவரை பல்வேறு காலகட்டங்களில் பல அரசியல் பிரிவுகள் இருந்தன. ‌கொங்கு நாடு என்பது ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை,தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களையும், திருச்சி மாவட்டத்தில் குளித்தலை, திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி ஆகிய வட்டங்களையும் உள்ளடக்கியது தான் கொங்கு மண்டலம். தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு கொங்கு நாடு. கொங்கு நாடும், கொங்கு வேளாளர்கள் பற்றிய வரலாறும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மறைக்கப்பட்டு, புதைக்கப்பட்டு கொண்டிருந்தன. விரிவாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவின் முதல் சுதந்திர போரட்ட தியாகி தீரன் சின்னமலைக் கவுண்டர், வாய்க்கால் பெட்டி வரலாறு படைத்த காலிங்கராயன், பொன்னர்-சங்கர் போன்றவர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டக்கூட யாரும் முன் வரவில்லை.

கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் உதயமாகி அரசியல் அமைப்பாக உருவெடுத்த பிறகு தான் அவர்கள் எல்லாம் மீண்டும் கொங்கு நாட்டில் உதயமானார்கள். ஒடாநிலையில் தீரன் சின்ன மலைக்கு மண்டபம், கிண்டியில் சிலை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தீரன் சின்னமலை மாளிகை, காளிங்கராயன் இல்லம் இவ்வாறு பல பெயர்கள் பொது மக்களுக்கு தெரியும் படி வெளிக்கொண்டு வந்தோம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொங்கு நாடு என்று சொன்னாலே யாருக்கும் தெரியாது. ஈரோடு, கோவை, நாமக்கல் என அந்ததெந்த மாவட்டத்தின் பெயரை சொன்னால்தான் தெரியும். ஆனால், இப்போது நாம் அரசியல் களம் கண்ட பிறகு சென்னையிலும், டெல்லியிலும் உள்ளவனுக்கும் கொங்கு நாடு என்று சொன்னால் தெரியும்.அந்தளவுக்கு நம்முடைய அரசியல் பலம் மற்றவர்களுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சட்டமன்ற தேர்தலிலும் தெரியப்படுத்தினோம். நமக்கும் நம் நாட்டிலுள்ள மற்றவர்களுக்கும் தேவையான உரிமைகளை அரசிடம் இருந்து பெ ற்று தந்து நம் கொங்கு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

இத்தருணத்தில் இளைஞர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தனது பகுதி நேரத்தை அரசியலுக்காகவும், நமது இயக்கத்திற்காகவும் ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து ஒ‌‌ரே பாதையில் நாம் அனைவரும் பயணித்தால்

வலிமையான பாரதம்!
வளமான தமிழகம்!
வசதியான கொங்குநாடு!!

என்ற வார்த்தைகளையும், கனவுகளையும், நிஐமாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஓன்றுபடுவோம் !!‌ வெற்றி பெறுவோம்!!!
நாளை நம‌தே! வெற்றி நிச்சயம்!!