E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

தொட்டது துலங்கும், வைச்சது விளங்கும் அந்தளவுக்கு ஆளுகின்ற திறன் படைத்தவர்கள் கொங்கு நாட்டு மக்கள். கொங்கு நாட்டில் தொழில் வளர்ச்சி அடைந்திருக்கிறது ‌என்றால் இது அரசாங்கத்தின் தனிப்பட்ட கவனம் அல்ல. தமிழகத்தை ஆண்டவர்கள் தலைமைப் பொறுப்பிலே கட்சிகளிலே இருந்தவர்களெல்லாம் கொங்குநாட்டைச் சேர்ந்தவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை. முழுக்க முழுக்க கொங்கு நாட்டுக்காரனின் ‌நேரங்காலம் பார்க்காத கடினமான உழைப்பே அதற்க்குக் காரணம். தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையே அதற்குக் காரணம்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதை திட்டமிட்டுச் செய்கின்ற ஆளுமைத்திறன் நம்மிடம் அபரிமிதமாக உள்ளது. உதாரணத்துககு பண்டைய காலத்தில் பஞ்சாலைகளுக்கெல்லாம் நடத்தப்பட்ட விதம் வேறு மில் முதலாளிகளலென்றால் அவர்கள் வாழ்ந்த விதம் வேறு. ‌எப்போது கொங்கு நாட்டின் விதை பஞ்சாலைத் தொழிலில் கால் வைத்ததோ ‌அன்று முதல் பஞ்சாலைகளை தறி குடோன் போல எளிமையாக நடத்த ஆரம்பித்தரர்கள். இது தான் கொங்கணின் ஆளுமைத்திறன்.

கல்விக் கூடங்களில் கை வைத்தவுடன், தமி‌‌ழகத்தின் கல்வி வளர்ச்சி உச்சத்தைத் தொட்டதை அனைவரும் அறிவார்கள் இன்று உலகம் முழுவதும் இருக்கின்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொங்குநாட்டுக் கல்வியகங்களில் படிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள். இந்த வெற்றிக்குக் காரணம், நாம் ‌எதையு‌மே தொழிலாக பார்ப்பதில்லை மக்களுக்கு ஆற்றுகின்ற சேவையாகத் தான் கருதுகிறோம். மனித குலத்தின் வளர்ச்சி தான் நம் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த ஆளுமைத்திறன் ஆட்சி அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டால் இந்த நாடே பயனைடயும். கொங்கன் அரியனையேறும் போது அது நடக்கும்.