E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

தொலை‌நோக்கு திட்டங்கள்

(i) உள்கட்டமைப்பு வசதிகள்

  • நமது கொங்கு நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல் அத்தியாவசிய தேவைகளுள் மிக முக்கிய ஒன்று போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள கோவை மற்றும் ஈரோடு, சேலம் போன்ற மாநகரங்களில் மேம்பாலங்கள் மற்றும் ரிங்ரோடுகளை அமைத்தல்.
  • மேலும் அனைத்து மாநகர, மாவட்டங்களிலும் நவீன பாதாள சாக்கடைத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

(ii) விமான நிலையம்

  • கோவை மற்றும் சேலம் விமான நிலையங்களின் தரம் உயர்த்தப்படும். மேலும், கோவை விமான நிலையத்தினை சர்வதேச அளவில் தரம் உயர்த்த சின்னியம்பாளையம் பகுதி விவசாயிகள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆசிய, ஐரோப்பிய கண்டங்களை இணைக்கும் வகையில் சர்வதேச விமானங்கள் இயக்கப் பாடுபடுவேன்.