E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

தொலை‌நோக்கு திட்டங்கள்

(iii) தொழிலகங்கள்

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டதிற்கு மிக முக்கிய பிரதான தடை மின்வெட்டு பிரச்சினை

  • மின் உற்பத்தி மற்றும் வினியோக பணிகளில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தி தடையில்லா மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கொங்கு மண்டலத்தில் தொழிலக கூட்டமைப்புகளினை போதுமான அளவு உருவாக்குவதோடு, பொதுவான வசதிகளை பெருக்கி ‌எல்லோருக்கும் கிடைக்க செய்வேன்.
  • உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய பெட்டக வசதியுடன் கூடிய சரக்கு ரெயில்களை கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு,சேலம் வழியாக இயக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றப் பாடுபடுவேன்.இதன் மூலம் விரைவான, தரமான குறைந்த கட்டணத்தில் ஏற்றுமதி செய்யமுடியும்.
  • அதிவேகமாக கோவை மாநகரம் வளர்ந்து வருவதால், ஏராளமான தொழி‌லாளர்கள் வேலைவாய்ப்புக்காக கோவை வருவதால் பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, தரமான வீடுகள் உருவாக்கப்படும்.
  • சைமா(SIEMA) , சீமா,(SIMA), கொடிசீயா (CODISSIA), CII போன்ற தொழில் அமைப்புகளுடன் இணைந்து தொழில் ‌அபிவிருத்திக்கு பாடுபடுவேன்.
    SIEMA - Southern India Engineering Manufacture's Association.
    SIMA - Southern India Mill's Association.
    CODISSIA - Coimbatore District Small Industries Association.
    CII - Confederation of Indian Industry.