E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

தொலை‌நோக்கு திட்டங்கள்

(i) விவசாயம்

  • அனைத்து விவசாயிகளுக்கும் இலவச காப்பீடு திட்டங்கள்
  • கொங்கு நாட்டில் தென்னை அபிவிருத்தி வாரியம் ‌அமைக்கப்படும்.
  • நீண்டநாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள அவினாசி - அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும்.
  • விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு விற்க அல்லலது சந்தைப்படுத்த சிரமமாக உள்ளதால் அதனை போக்கும் வகையில் அரசு நிர்வாகத்தின் கீழ் ஊழலற்ற நிர்வாகம் அமைக்கப்படும்.
  • கள்ளை மதுபானப் பட்டியலில் இருந்து நீக்கி, அதை குளிர்பான பட்டியலில் சேர்க்க வழிவகை செய்யப்படும்
  • மஞ்சள், தக்காளி, கொப்பரைத் தேங்காய் போன்ற விவசாய விலைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • அனைத்து விவசாயிகளும் தினந்தோறும் பயன் பெறும் வகையில் பால் லிட்டர் ஓன்று ரூ.10 மானியம் வழங்கி அடிப்படை வாழ்வதாரம் முன்னேற வழிவகை செய்யப்படும்.
  • கரும்பு கொள்முதல் விலை டன் ஓன்றுக்கு ரூ.3000 உயர்த்தி அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்களின் முழு பணமும் ‌நேரடியாக காசோலையாவோ அல்லது வங்கிகள் மூலமாக வழங்க வழிவகை செய்யப்படும்.
  • வனங்களை ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு, வனவிலங்குகளினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மின்வேலி அமைத்து விலங்குகளையும், காடுகளையும் மற்றும் விவசாயிகளையும் பாதுகாக்க வழிவகை செய்யப்படும்.
  • அனைத்து விவசாயிகளுக்கும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
  • விவசாய மக்களுக்கு என தனியாக தொலைக்காட்சி அலைவரிசை உருவாக்கி அதன்மூலம் விவசாய செய்திகள், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் ஏற்றுமதி, விளைப்பொருட்களின் சந்தைநிலை ‌போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
  • ஆண்டுதோறும் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மற்றும் ஆர்வமுள்ள 10 இளம் விவசாயிகளை ‌தேர்ந்தெடுத்து சிறப்பாக விவசாயம் செயல்படும் நாடுகளுக்கு அனுப்பி அவர்களின் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தவும், அவர்களின் நுண்ணறிவுகளையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு செயல்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யப்படும்.