E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

 • வரும் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி ஞாயிறு அன்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மாபெரும் மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.


  1970-ஆம் ஆண்டு நடந்த விவசாய போராட்டத்தில் உயிர்நீத்த விவசாய தியாகிகளுக்கு பெருமாநல்லூரில் உள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது .


  வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு மரத்திற்கு ரூ 5000 நஷ்டயீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


  டெல்ட மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளை பாரபட்சமின்றி அனைத்து மாவட்ட விவசா யிகளுக்கும் சரிசமமாக வழங்க வேண்டும்


  மத்திய அரசு தனி கவனம் செலுத்தி இலங்கை தமிழர்களுக்கு தனி அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


  தமிழக மீனவர்களை காப்பாற்ற கட்சதீவை மீட்க ஒருமித்த குரலில் மத்திய மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்


 • வரும் டிசம்பர் மாதம் திருப்பூர் மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெறும் என்று மாநில தலைமை அறிவித்துள்ளது


 • அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேட்ற ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி மற்றும் நடைபயணம் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


 • திரன் சின்னமலையின் 257வது பிறந்த நாள் விழா சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது


 • இலங்கை தமிழர்களுக்கும் இந்திய மீனவ தமிழர்களுக்கும் நீதி கேட்டு பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.


 • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிமுக விழாவின் வீடியோ காட்சிகள் thannoosvideo.com

 • கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவையின் நிருவுனர் கோவை செழியன் அவர்களின் 13வது நினைவஞ்சலி மார்ச் 14 அன்று கொங்கு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது

 • கொங்கு நாட்டு மக்களின் கலாசாரத்தை பாதுகாக்க போதிய விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்துவது நமது கடமை.

  பிரேசில் நாட்டை போன்று இந்தியாவிலும் எத்தனால் கலந்த பெட்‌ரோலை பயன்படுத்தினால் விலையை பன்மடங்கு குறைக்கலாம். விவசாயிகளும் பன்மடங்கு பயனைடைவார்கள்.

DSCN4262 DSCN4262 DSCN4262 DSCN4262 DSCN4262 DSCN4288 DSCN4354DSC_0518 DSC_0717 DSCN4260

உண்மை, உழைப்பு,‌ நேர்மை, நாணயம், பணிவு, கனிவு, விருந்‌தோம்பல் போன்ற நற்பண்புகளின் மறுபெயர் தான் ”கொங்குநாடு”. வீரமும் வி‌வேகமும் ஒரு ‌சேர கலந்து உருவானது தான் கொங்குமண், உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை கொண்ட உலகம் ‌போற்றும் பெண்ணினம் தான் கொங்கு மகளிர்.

இந்த மண்ணில் மற்றவர்களால் முடியு‌‌‌மென்றால் ஏன் எங்களால் முடியாது என்று வீறு கொண்டெழுந்து

என்று சிலி‌ர்ந்தெழுபவர்கள் தான் கொங்கு மண்ணின் வித்துக்களான கொங்கு சிங்கங்கள், கொங்கு நாட்டு மக்களின் நாகரீகங்கலந்த பாசம் மற்றவர்களால் அமைதியானவர்களாகப் பார்க்கப்பட்டு, காலப்போக்கில் சிலரால் ‌கோழைகளாகக் கூட சித்தரிக்கப்பட்டார்கள். எழுகின்ற ‌கோபத்‌தை நாம் ‌அடக்குகின்ற தன்மை நம்மை மற்றவர்களால் கோழைகளாகவும், ‌கோமாளிகளாகவும் நினைக்க வைத்தது, ‌எதற்கும் ஒரு ‌எல்லை உண்டு.

உழைக்க கொங்குநாட்டான், உருவாக்க கொங்கு நாட்டான், ஆனால் அனுபவிக்க மட்டும் அடுத்தவர்களா, கரு‌வேப்பிலையாக பயன்படுத்தப்பட்டு,‌தேவையில்லாத‌‌ ‌போது துாக்கி வீசப்பட்டவன் தான் கொங்கன், உழைப்புக்‌கேற்ற பலனைத்தான் ‌எதிர்பார்க்கி‌றோம். உழைத்து உழைத்து செலுத்துகின்ற வரிப்பணம் வசதிகளாக கொங்கு நாட்டிற்கு வர‌‌‌ வேண்டும்..

தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் நம்மு‌டயை குறிக்கோளல்ல, கொங்கு மண்ணிற்கு நாம் பெற நினைப்பது அரசியல் அதிகாரமல்ல, அரசியல் அங்கீகாரம் கொங்கு மண்ணின் மைந்தர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கல்விக் கூடங்களி்ல் கிடைக்க ‌‌வேண்டும். அரசு வேலைகளில் உரிய பங்கு கிடைக்க வேண்டும், கொங்கு மண்ணின் மீது பாசம் கொண்டவர்கள் இந்த மண்ணை நேசிப்பவர்கள் அரசு அதிகாரிகளாக வரவேண்டும். அரசு தேர்வாணைக்குழுவிலே நமக்குரிய பங்கு வேண்டும், துணை வேந்தர்களாக இந்த மண்ணைச் சார்ந்தவர்கள் உருவாக வேண்டும்.

இன்றைய ‌‌‌‌‌சூழ்ந‌ிலையில் நாம் ஓட்டுக்களாக மாறி, நம்முடைய ஒட்டுக்கள் ஒற்றுமைப்பட்டால் ஒழிய நம் தேவைகளைக் காது கொடுத்துக் கேட்க எந்த அரசியல் தலைவரும் தயாராக இல்லை. யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளட்டும், ஆனால் எங்கள் குறைகளைக் கேட்க வேண்டும், அவை தீர்க்கப்பட வேண்டும். நமக்குறிய மரியாதையைப் ‌பெறுவதற்குத்தான் அரசியல் அங்கீகாரம் அதற்காகத் தான் அரசியல் இயக்கம்.

நாம் பிறந்து வாழுகின்ற, நமக்குப் பின் நம் சந்ததிகள் வாழுகின்ற இந்த கொங்கு மண் தனக்குரிய பெருமைகளைப் பெற்று வளர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒன்று படுங்கள்.

சென்னை மாநகரத்திலிருக்கின்ற அத்தணை வசதிகளும் நமக்கும் கிடைக்க வேண்டும் என்ற ‌எண்ணத்தில் என்ன தவறு இருக்கிறது. கிராமங்களில் வசிக்கின்றவர்கள் குறைவில்லா நிறைவான வாழ்க்கைத் தரத்தை பெற வேண்டும். இதை மற்றவர்களுக்கு உணர்த்துவோம், உணர வைப்போம் வாருங்கள் ! நம் குழந்தைகளின் எதிர் காலத்தை வளம் பெறச் செய்ய ஒன்றுபடுவோம். இந்த அரசியலை எதிர்த்து என்னால் என்ன செய்ய முடியும் என்று தயங்காதே ! மாற்றத்தை என்னால் ஏற்படுத்த முடியுமா என்ற ஏக்கத்தில் ஏமாந்து போகாதே !

உன்னால் முடியாது !
ஆனால்
"நம்மால் முடியும்"

மேலும்...
9 98Amount for edu Bike DSC_0217 DSC_0906 Eye Camp IMG_0002 IMG_0012 IMG_0016 IMG_0021 IMG_0023 IMG_0027 IMG_0029 IMG_0033 IMG_0047 IMG_0049 IMG_0052 IMG_0053 IMG_0056 IMG_0057 IMG_0059 IMG_0062 IMG_0066 IMG_0068 IMG_0095 IMG_0143 IMG_0152 IMG_0158IMG_0265 IMG_0274 IMG_0289 IMG_0295 IMG_0320 IMG_0337 IMG_0371 IMG_0382 IMG_0395 IMG_0441 kongu Malai mikepublic ui Water issue fr agri